Local

இலங்கையில் கொவிட் தொற்றாளர்களில் 30 வீதமானோருக்கு டெல்டா!

நாட்டில் அடையாளம் காணப்படும் கொவிட் தொற்றாளர்களில் 30 வீதமானோர் டெல்டா தொற்றாளர்கள் என சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.

இதேவேளை , கொழும்பில் அடையாளம் காணப்படும் கொவிட் தொற்றாளர்களில் 20 முதல் 30 வீதமானோர் டெல்டா தொற்றாளர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு மாவட்டம் மாத்திரமன்றி, வடக்கு, தெற்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் டெல்டா பரவல் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வைரஸ் பரவலை தடுப்பதற்கு, சுகாதார வழிமுறைகளை உரிய வகையில் கடைபிடிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

டெல்டா கொவிட் வைரஸ் தொற்றாளர்கள், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடும் என அவர் சந்தேகம் வெளியிடுகின்றார்.

மேலும் ,PCR பரிசோதனைகளின் மூலம் பெற்றுக்கொண்ட பெருமளவான மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்திய நிலையிலேயே, 68 டெல்டா தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், மேலும் பலர் இருக்கக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading