Local

இலங்கையில் 9 மடங்குகளினால் அதிகரித்துள்ள வாய் புற்றுநோய்!

நாட்டில் கடந்த 20 வருடங்களில் வாய் புற்றுநோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கை 9 மடங்குகளினால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய புற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவிக்கின்றது.

இதன்படி ,வாய் புற்று நோய் அதிகரிப்பதற்கு, பாக்கு பயன்பாடு பிரதான காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிடுகின்றது.

ஆண்களுக்கு மத்தியில் வாய் புற்றுநோய் அதிகளவில் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்து.

மேலும் ,2019ம் ஆண்டு புதிய வாய் புற்றுநோய்க்குள்ளான சுமார் 2,700 பேர் பதிவாகியிருந்த நிலையில், நாளாந்தம் வாய் புற்று நோய் காரணமாக இரண்டு அல்லது மூன்று மரணங்கள் பதிவாகி வருவதாகவும் தேசிய புற்றுநோய் தடுப்பு பிரிவு கூறுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading