Local

இலங்கையில் சில மாவட்டங்களில் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஊரடங்குச் சட்டம்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்குச்சட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மாவட்டங்களில் ஒரு சில பொலிஸ் பிரிவுகளைத்தவிர ஏனைய பகுதிகளில் எதிர்வரும் 22 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே அது தற்போது மாற்றப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு உள்நுழைவதும், அங்கிருந்து வெளியேறுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, நுவரெலியா உட்பட ஏனைய 21 மாவட்டங்களில் எதிர்வரும் 24 ஆம் திகதி இரவு 8 மணி முதல் 27 ஆம் திகதி காலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

ஊரடங்குவேளையில் விவசாயம், அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading