Local

இலங்கையில் திடீரென அதிகரித்த கொரோனா வைரஸ் தொற்று

இலங்கையில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 17 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 45ஆக அதிகரித்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட 17 பேரில் 15 பேர் டுபாயிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள்.

மற்றைய இருவரும் முல்லைத்தீவு கேப்பாபுலவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள கடற்படைச் சிப்பாய்கள் என்றும் சுகாதார அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இதுவரை 604 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 432 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading