Local

இலங்கையில் தேர்தல் நடந்தால் உலக சாதனையாகும்!

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள இச் சந்தர்ப்பத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் அது உலக சாதனையாக கருதப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் தேர்தல் நடத்துவதானால் பணம் அச்சடிக்க வேண்டி நேருமென்றும் அவ்வாறு பணம் அச்சடித்து தேர்தல் நடத்தப்பட்டால் அது இலங்கையின் உலக சாதனையாகவே அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தல் நடத்தப்படுமா, இல்லையா என்பது தொடர்பில் ஊடகவியலாளர்கள் அவரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் 2,500 மில்லியன் ரூபா பணம் அச்சடித்து அரசாங்கத்தின் செலவுகள் நிவர்த்தி செய்யப்பட்டமை இரகசியமானதல்ல என்பதை குறிப்பிட்ட அவர், பணம் அச்சடிக்கப்பட்டதால் பண வீக்கம் அதிகரிப்பதற்கு அது சந்தர்ப்பமாக அமையாமைக்கு காரணம் அதனை அன்றாட செலவுகளுக்காக பெற்றுக்கொள்ளாமல் நிதி முகாமைத்துவம் செய்யப்பட்டதாலேயே என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading