மகள்களின் பாதுகாப்பிற்காக பெண்ணாக மாறிய நபர்!

தனது மகள்களின் பாதுகாப்பிற்காக தன்னை பெண்ணாக மாற்றிக்கொண்ட தந்தையின் பாசப்போராட்டம் ஒன்று தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
ஈக்வடாரில் சேர்ந்த நபர் ஒருவரே இந்த செயலை செய்துள்ளார்.
பாசத்தால் தன்னையே ஒருவர் பெண்ணாக மாற்றிக்கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஈக்வடாரை சேர்ந்த 47 வயதான ரெனே சலினாஸ் ராமோஸ் எனும் நபர் தனது மகள்களின் பாதுகாப்பிற்காக தன்னையே பெண்ணாக மாற்றிக்கொண்டுள்ளார்.
இவர் செய்த செயலானது திருநங்கைகள் உரிமைக்குழுவை கோபமடைய செய்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில் குழந்தைகள் தந்தையுடன் இருக்கும் பொழுது ஏற்படும் சண்டைகளுக்கு தங்கள் நாட்டில் சாதகமான சட்டங்கள் இல்லை, தாய்மார்களுக்கே சட்டங்கள் சாதகமாக உள்ளது. அதனால் தான் எனது அடையாளத்தை சட்ட பூர்வமாக பெண்ணாக மாற்றினேன், என்று கூறினார்.
ரெனே சலினாஸ் ராமோஸ் எனும் தனது பெயரை ஃபெமெனினோ எனவும் மாற்றியுள்ளார்.
சலினாஸ் ராமோஸ் தனது குழந்தைகளுக்காக பெண்ணாக மாறியது உன்னதமான செயலாக இருந்தாலும் அவரது பாலின மாற்றத்தால் திருநங்கைகள் உரிமைக்குழுவைச் சேர்ந்த திருநங்கை ஆர்வலர்களை கோபமடைய செய்துள்ளது.
