Local

இலங்கையில் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு மாதச் செலவு 63,912 ரூபா

இலங்கையில் ஒருவர் தனது குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஒரு மாதத்திற்கு 15,978 ரூபாவைச் செலவிட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 2023க்கான மாதாந்திர வறுமைக் கோடு அட்டவணையை வெளியிட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் ஒருவர் தனது குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஒரு மாதத்திற்கு 15,978 ரூபாவைச் செலவிட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த தொகை ஜூன் மாதம் 16,089 ரூபாயாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 2023 புள்ளிவிவரத்தின்படி, நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான குறைந்தபட்ச மாதச் செலவு 63,912 ரூபாய் ஆகும்.

கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மாதாந்த அதிக செலவுகளை செய்யவேண்டியுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய ஒருவருக்கு 17,233 ரூபாய் தேவைப்படுவதுடன், ஜூன் 2023 இல் இந்த தொகை 17,352 ரூபாயாக காணப்பட்டுள்ளது.

மொனராகலை மாவட்டத்தில் ஒருவரின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய குறைந்தளவு பெறுமதி பதிவாகியுள்ளதுடன், அதன் பெறுமதி 15,278 ரூபாவாகும்.

எவ்வாறாயினும், ஜூன் மாதம் இந்த பெறுமதி 15,383 ரூபாயாக காணப்பட்டதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading