Local

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் இருந்து இராணுவம் வெளியேறியது;

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட மட்டக்களப்பில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் உத்தியோகபூர்வமாக அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரான முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம் இராணுவத்தினர் மட்டக்களப்பு வளாகத்தை உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளனர்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஹிஸ்புல்லா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய பல்கலைக்கழகம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு வருடங்களாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் பல்கலைக்கழகம் இருந்ததாகக் கூறிய ஹிஸ்புல்லா, ஈஸ்டர் தாக்குதல்களுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பு இல்லை என்று நிரூபிக்கப்பட்டதை அடுத்து பல்கலைக்கழகம் மீளவும் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading