Local

இலங்கையில் நேற்று திடீரென அதிகரித்த கொரோனா நோயாளிகள்

இலங்கையில் நேற்று (21) 23 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 2,941 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து 16 பேர், இந்தியாவில் இருந்து 2 பேர் மற்றும் இந்தோநேசியா, துருக்கி, குவைத்தில் இருந்து ஒருவர் என நாடு திரும்பிய 23 பேருக்கே தொற்று கண்டறியப்பட்டுள்ளனர்.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 141 ஆக காணப்படுகிறது.

இதேவேளை இதுவரை 2,789 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading