Local

இலங்கையில் பரவும் புதிய வைரஸ் உடனடியாக வைத்தியரை நாடுமாறு அறிவுறுத்தல்!

இலங்கையில் டெங்கு காய்ச்சலின் புதிய பிறழ்வு அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெறுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

டெங்கு காய்ச்சலின் புதிய பிறழ்வு வேகமாக பரவி வரும் நிலையில் காய்ச்சல் ஏற்படின் உடனடியாக வைத்தியரை நாடுமாறும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜீ. விஜேசூரிய வலியுறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக, புதிய வைரஸ் தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாக்க சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய வைரஸ் பரவலுக்கான அறிகுறிகள்
அத்துடன், பிள்ளைகளுக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் அல்லது காய்ச்சல் ஏற்படுமாயின் உடனடியாக வைத்தியரை நாடுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொண்டைவலி, காய்ச்சல், இருமல், சளி போன்றவை புதிய வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் வயதானவர்கள் மத்தியில் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading