இலங்கையில் பாலியல் கல்வி! சிறுவர்களுக்கு ஆபத்து!!
பாலியல் கல்வியை பாடத்திட்டத்தில் உள்ளடக்குவதன் மூலம் சிறுவர்களைத் தவறான வழியில் திசைதிருப்பும் திட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 6 ஆம் தரம் முதல் பாலியல் கல்வி வழங்க ஒரு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறதாம். தன்பால் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது பற்றியும், பிறப்புக் கட்டுப்பாடு பற்றியும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளதாம்.
இந்த நாகரிகமற்ற விடயங்களை நம் பிள்ளைகளுக்குக் கற்பிக்கச் செல்ல வேண்டாம். நல்லது கெட்டது தெரியாத இந்தப் பிஞ்சுகளைத் தவறான வழியில் கொண்டுசெல்ல கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்தால், நாம் அதை முழுமையாகக் கண்டிக்க வேண்டும். இத்தகைய விடயங்களை குழந்தைகளுக்குத் தேவைப்படும்போது எடுத்துரைக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கே உரியது, இது கல்வி அல்ல, இது திசைதிருப்பும் செயலாகும்.
அடுத்த வருடம் ஜனவரி மாதம் 27ஆம் திகதி முதல் இந்தப் பாடங்கள் பாடசாலைகளில் கற்பிக்கப்பட உள்ளனவாம். “நாகரிகமான ஒரு அரசாங்கம் இவ்வாறான விடயங்களுக்கு எப்படி இடமளிக்கிறது? நம் கலாசாரத்தையும் நாகரிகத்தையும் அழிக்க அனுமதிக்க முடியாது. நம் நாட்டை ஆளும் தலைவர்கள், “நம் நாட்டின் கலாசாரம், நாகரிகம், மதம் ஆகியவற்றை பாதுகாக்க தைரியமாக முன்நிற்க வேண்டும்.
இந்த விடயங்களை அமைச்சு அதிகாரிகளின், சில மருத்துவ சங்கங்களின், அல்லது சில சட்டத்தரணி சங்கங்களின் விருப்பப்படி திசை திருப்ப இடமளிக்க வேண்டாம்” என்று ஜனாதிபதியிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன்
– பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் –

You must be logged in to post a comment.