Lead News

இலங்கையில் வாகனம் இறக்குமதி செய்யும் போது அதன் மொத்த செலவை எப்படி கணக்கிடுவது !!

 

ஒரு வாகனத்தின் தரையிறக்கும் செலவு (Landing Cost) என்பது அதன் CIF மதிப்பு (Cost, Insurance & Freight) மற்றும் இலங்கை சுங்கத்துறைக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரி மற்றும் கட்டணங்களின் மொத்தமாகும். CIF என்பது வெளிநாட்டில் வாகனத்தை கொள்வனவு செய்யும் பெறுமதி, அதனை நமது நாட்டிற்கு கொண்டு வருவதற்கு தேவையான காப்புறுதி செலவு மற்றும் கொண்டு வருகின்ற கப்பலுக்கு சொலுத்தப்படுகின்ற தொகை.

வரிகளின் வகைகள்

இலங்கை சுங்கத்துறைக்கு செலுத்த வேண்டிய முக்கிய வரிகள் மற்றும் கட்டணங்கள்:

* Excise Duty – என்ஜின் கொள்ளளவு (cc) அல்லது மின்சார மோட்டார் சக்தி (kW) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது

* Luxury Duty
* Customs Duty
* Surcharge Duty
* VEL (Vehicle Entitlement Levy)
* EXM (Export Management Fee)
* VAT (Value Added Tax) – மொத்த மதிப்பில் 18%

1. அபரத வரி (Excise Duty)

* பெட்ரோல், டீசல் மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கு cc அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

* தூய மின்சார (Battery Electric) மற்றும் Series Hybrid வாகனங்களுக்கு கிலோவாட்டில் (kW) மோட்டார் சக்தி அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

2. ஆடம்பர வரி (Luxury Duty)

வாகனத்தின் வகைக்கு ஏற்ப ஆடம்பர வரி (Luxury Duty) விதிக்கப்படும். விதி வரம்புகள் மற்றும் அதற்கு மேற்பட்ட வீதங்கள் வாகன HS Code ற்கு ஏற்றவாறு மாறுபடுகின்றன.

டீசல் வாகனங்களுக்கு ஆடம்பர வரி வரம்பு ரூ. 5,000,000 ஆகும், மேலும் அந்த வரம்பை மீறும் தொகைக்கு 120% வரி விதிக்கப்படும்.

பெட்ரோல் வாகனங்களுக்கு வரி வரம்பு இதேபோல் ரூ. 5,000,000, ஆனால் அதற்கு மேலான தொகைக்கு 100% வரி விதிக்கப்படும்.

ஹைபிரிட் வாகனங்களுக்கு சிறிதளவு உயர்ந்த ஆடம்பர வரி வரம்பு ரூ. 5,500,000 ஆகும். இந்த வரம்பை மீறும் தொகைக்கு பெட்ரோல் ஹைபிரிட் வாகனங்களுக்கு 80% மற்றும் டீசல் ஹைபிரிட் வாகனங்களுக்கு 90% வரி விதிக்கப்படும்.

இதற்கிடையில், மின்சார (Battery Electric) மற்றும் Series Hybrid Electric வாகனங்களுக்கு மிக உயர்ந்த ஆடம்பர வரி வரம்பான ரூ. 6,000,000 வழங்கப்பட்டுள்ளது, மேலும் அந்த வரம்பை மீறும் தொகைக்கு ஒப்பீட்டளவில் குறைந்த 60% ஆடம்பரவரி விதிக்கப்படும்.

வாகன வகை CIF வரம்பு (ரூபாய்) ஆடம்பரவரி வீதம்
டீசல் 5,000,000 120%
பெட்ரோல் 5,000,000 100%
ஹைபிரிட் 5,500,000 பெட்ரோல் – 80%, டீசல் – 90%
மின்சாரம்/Series Hybrid 6,000,000 60%

3. பிற வரிகள் மற்றும் கட்டணங்கள்

* Customs Duty: CIF மதிப்பின் 20%
* Surcharge Duty: Customs Dutyயின் 50% (அதாவது CIF மதிப்பின் 10%)
* VEL: ரூ. 15,000
* EXM: ரூ. 1,750
* VAT: CIF + அனைத்து வரிகளின் மொத்தத்தில் 18%

எடுத்துக்காட்டு கணக்குகள்

பெட்ரோல் ஹைபிரிட் வாகனம் (1.5L என்ஜின்)

Excise Duty: ரூ. 3,450 × cc
Luxury Duty Threshold: ரூ. 5.5 மில்லியன்

CIF மதிப்பு வரம்பை மீறும்போது, ஒவ்வொரு ரூ. 1 அதிகரிப்புக்கும் ரூ. 2.478 தரையிறக்கும் செலவு உயரும்.

கணக்கீடு:
(1 + 0.8 + 0.2 + 0.1) × 1.18 = 2.478

* 1 = CIF value
* 0.8 = 80% luxury duty
* 0.2 = 20% customs duty
* 0.1 = 10% surcharge duty
* 1.18 = 18% VAT

எடுத்துக்காட்டு 1

CIF ரூ. 5.5 மில்லியன் (≈ USD 18,333)

(5,500,000 + 3,450×1,500 + 1,100,000 + 550,000 + 15,000 + 1,750) × 1.18
= ரூ. 14,563,265

எடுத்துக்காட்டு 2

CIF ரூ. 7.5 மில்லியன் (≈ USD 25,000)

அதிகப்படியான CIF = 2,000,000
அதிகப்படியான தரையிறக்கும் செலவு = 2,000,000 × 2.478 = 4,956,000

மொத்தம் = 14,563,265 + 4,956,000 = ரூ. 19,519,265

எடுத்துக்காட்டு 3

CIF ரூ. 9 மில்லியன் (≈ USD 30,000)
அதிகப்படியான CIF = 3,500,000
அதிகப்படியான செலவு = 3,500,000 × 2.478 = 8,673,000

மொத்தம் = 14,563,265 + 8,673,000 = ரூ. 23,236,265

எடுத்துக்காட்டு 4

CIF ரூ. 12 மில்லியன் (≈ USD 40,000)

அதிகப்படியான CIF = 6,500,000
அதிகப்படியான செலவு = 6,500,000 × 2.478 = 16,107,000

மொத்தம் = 14,563,265 + 16,107,000 = ரூ. 30,670,265

பெட்ரோல் ஹைபிரிட் (2.0L என்ஜின்)

Excise Duty: ரூ. 6,900 × cc

CIF Value: ரூ. 18 மில்லியன் (≈ USD 60,000)

படி 1 – முதல் 5.5 மில்லியன் வரை:

(5,500,000 + 6,900×2,000 + 1,100,000 + 550,000 + 15,000 + 1,750) × 1.18
= ரூ. 24,740,765

படி 2 – மீதம் 12.5 மில்லியன் × 2.478 = 30,975,000

மொத்தம் = 24,740,765 + 30,975,000 = ரூ. 55,715,765

பெட்ரோல் வாகனங்கள்

Excise Duty:
• 1.5L – ரூ. 4,450 × cc
• 2.0L – ரூ. 7,700 × cc

Luxury Duty Threshold: ரூ. 5 மில்லியன்

அதிகப்படியான தொகை மீதுள்ள வரி:
(1 + 1 + 0.2 + 0.1) × 1.18 = 2.714

* 1 = CIF value
* 1 = 100% luxury duty
* 0.2 = 20% customs duty
* 0.1 = 10% surcharge duty
* 1.18 = 18% VAT

எடுத்துக்காட்டு 1

1.5L, Engine – CIF ரூ. 5 மில்லியன்

(5,000,000 + 4,450×1,500 + 1,000,000 + 500,000 + 15,000 + 1,750) × 1.18
= ரூ. 15,566,265

எடுத்துக்காட்டு 2

CIF ரூ. 7.5 மில்லியன்

Excess (மேலதிக) CIF – 2,500,000 × 2.714 = ரூ. 6,785,000

மொத்தத் தொகை 15,566,265 + 6,785,000 = ரூ. 22,351,265

எடுத்துக்காட்டு 3

CIF ரூ. 9 மில்லியன்

Excess CIF – 4,000,000 × 2.714 = 10,856,000

மொத்தத் தொகை – 15,566,265 + 10,856,000 = ரூ. 26,422,265

எடுத்துக்காட்டு 4

CIF ரூ. 12 மில்லியன்
Excess = 7,000,000 × 2.714 = 18,998,000

மொத்தத் தொகை – 15,566,265 + 18,998,000 = ரூ. 34,564,265

பெட்ரோல் 2.0L என்ஜின் (CIF ரூ. 7.5 மில்லியன்)

படி 1 – முதல் 5 மில்லியன் வரை:

(5,000,000 + 7,700×2,000 + 1,000,000 + 500,000 + 15,000 + 1,750) × 1.18
= ரூ. 25,861,765

படி 2 – Excess 2.5 மில்லியன் × 2.714 = 6,785,000

மொத்தம் = ரூ. 32,646,765 (ரூ. 25,861,765 + ரூ. 6,785,000)

CIF ரூ. 18 மில்லியன் (≈ USD 60,000)

Excess = 13,000,000 × 2.714 = 35,282,000

மொத்தம் = ரூ. 61,143,765 (ரூ. 25,861,765 + 35,282,000).

முடிவு

தரையிறக்கும் செலவை கணக்கிடும் போது CIF மதிப்பை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கவும்:

1. ஆடம்பர வரம்பிற்குள் – சாதாரண வரிகள் மட்டுமே அடங்கும் (Excise duty + Customs duty + Surcharge duty + VEL + EXM + 18% Vat) ஆடம்பர வரி அடங்காது.

2. ஆடம்பர வரம்பை (Luxury Threshold) மீறும் போது – அதற்கும் மேற்பட்ட CIF (Cost, Insurance, Freight) தொகைக்கு அதிக அளவில் ஆடம்பர வரி (Luxury Duty) விதிக்கப்படும், அத்தோடு excise duty தவிர ஏனைய அனைத்து வரிகளும் உள்வாங்கப்படும்.

• ஹைபிரிட் வாகனங்களுக்கு: 2.478 × மேலதிக CIF
• பெட்ரோல் வாகனங்களுக்கு: 2.714 × மேலதிக CIF
• டீசல் வாகனங்களுக்கு: 2.95 × மேலதிக CIF – (1 + 1.2 + 0.2 + 0.1) × 1.18 = 2.95

இவ்வாறு கணக்கிட்டால் வாகனத்தின் மொத்த தரையிறக்கும் செலவு மற்றும் அரசிற்கு செலுத்த வேண்டிய வரி தொகை துல்லியமாக அறிய முடியும்.

பயனுள்ள தகவல்

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading