Local

இலங்கையில் மேலும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டிற்குத் தேவையான அத்தியாவசியமான உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் உரிவாயு என்பவற்றை இறக்குமதி செய்ய பெரும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

போதுமான டொலர் இருப்பு இன்மை மேலும் தொடர்ந்த வண்ணம் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தனியார் ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக வருகின்ற மாதங்களில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்கூட அதிகரிக்க நேரிடும் என்பதோடு தட்டுப்பாடும் ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading