Local

மதுபான கடைகள் திறக்க அனுமதித்த முட்டாள் யார்? கீதா குமாரசிங்க கேள்வி

மதுபான கடைகள் திறப்பு முட்டாள் தனமான செயல் என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க.

மதுபான நிலையங்களை திறந்தது ஒரு முட்டாள் தனமான செயலாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய அறுவடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிறிது சிறிதாக தண்ணீர் சேமித்து வந்த ஒரு தொட்டியை உடனடியாக உடைத்தெறியும் செயலாகவே தற்போது மதுபான கடைகள் திறக்கப்பட்ட விடயமும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

பெந்தர பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், யார் இவ்வாறான முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதை அறிய விரும்புவதாகவும், இவ்வாறான செயற்பாடுகளால் நாடாளுமன்ற உறுப்பினராக தனக்கு கிராமங்களுக்கு செல்ல முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இவ்வாறான நேரங்களில் மதுபான கடைகள் திறப்பு ஏற்புடையதல்ல என்பதை எந்நதவொரு முட்டாளும் புரிந்துகொள்வார் என்றும் இந்த விடயத்தை ஒரு குழந்தைக்கூட சொல்லும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க குறிப்பிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading