Local

இலங்கையில் ஹெலி வாங்கிய கோடீஸ்வரர் விமான சேவையையும் ஆரம்பிக்க திட்டம்!

பொலனறுவையில் ஹெலி வாங்கிய அரிசி வர்த்தகர் தான் என பிரபல ரத்னா அரிசி (rathna rice) உரிமையாளர் மித்ரபால லங்கேஸ்வரர் கூறியுள்ளார். இதனை ஹிரு சமுடித்தவுடனான நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

விரைவில் ஒரு சர்வதேச விமான சேவையைத் தொடங்கத் தயாராக இருப்பதாகவும், ஒரு தனியார் ஜெட் மற்றும் ஹெலிகொப்டர்களை வாங்குவுள்ளதாகவும் அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் பணம் தன்னிடம் உள்ளது என எழுந்த குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். அடுத்த தேர்தலில் போட்டியிடுவதாகவும் அவர் கூறினார்.

ரொபின்சன் வகை ஹெலிகொப்டர் ( Robinson helicopter ) வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 120 மில்லியன் முதல் ரூ. 160 மில்லியன் ஆகும்.

ரத்மலானை விமான நிலையத்தை தளமாகக் கொண்ட மற்றொரு தனியார் விமான நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading