Local

இலங்கையை நோட்டமிடும் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை!

இலங்கையின் செயற்பாடுகள் தொடர்பில் இந்தியாவின் ஆளில்லா விமான கருவிகள் பயன்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இது தொடர்பில் ஆராய்வதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பதற்கு ஆளில்லா விமான கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக இந்திய கடற்படையின் உப பிரதானி அசோக் குமார் தெரிவித்திருந்தார்.

சீனாவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக தமது நாட்டின் பாதுகாப்பு கருதி ஆளில்லா விமான கருவிகள் பயன்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் பதிலளிக்கும் போதே கெஹெலிய ரம்புக்வெல்ல இதை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading