Local

வழியை மாற்றினார் ரணில்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர், நேரடியாக அபயராம விகாரைக்குச்சென்று விகாராதிபதி, முறுந்தெட்டுவே ஆனந்த தேரரிடம் ஆசிபெற்றுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மற்றும் ஏனைய முக்கிய பதவிகளை வகித்த சந்தர்ப்பங்களிலெல்லாம், கங்காராம விகாரைக்குச்சென்று வழிபடுவதே வழமை. எனினும், வழமைக்கு மாறாக இம்முறை ரணில் செயற்பட்டுள்ளார்.

நல்லாட்சியை விரட்டி, ராஜபக்ச ஆட்சியை கொண்டுவருவதற்கு பாடுபட்ட தேரர்களில் முறுத்தெட்டுவ ஆனந்த தேரரும் ஒருவர். தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகளை அவர் வெளிப்படையாகவே விமர்சித்துவருகின்றார்.

இந்நிலையில் அவரை ரணில் சந்தித்து ஆசிபெற்றமை குறித்து அரசியல் களத்தில் பலகோணங்களில் கதை அடிபடுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading