Local

இலங்கையில் 500 இற்கும் அதிகமான சிறுவர்கள் கொரோனாவால் பாதிப்பு!

நாட்டில்  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 500 இற்கும் அதிகமான சிறுவர்கள், இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவிக்கின்றார்.

அத்துடன், 10 சிறுவர்கள் கொரோனா தொற்றினால்  உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் நாட்டில் நாளாந்தம் கொரோனா தொற்றுக்குள்ளாகின்ற சிறுவர்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருவதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி நாளாந்தம், 5 முதல் 10 இற்கு இடைப்பட்ட சிறுவர்கள், கொரோனா தொற்றுக்குள்ளாகுவதை அவதானிக்க முடிவதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா  குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் covid19 தொற்றுக்குள்ளான 28 சிறுவர்கள், தற்போது கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் சிலருக்கு COVID 19 மற்றும் டெங்கு காய்ச்சல் ஆகிய, இரண்டும் உள்ளமை கண்டறியப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், சிறுவர்களை சன நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading