Local

இலங்கையில் 62% மக்களால் சுயமாக கணினியைப் பயன்படுத்த முடியாது

இலங்கையில் 62% மக்களால் சுயமாக கணினியைப் பயன்படுத்த முடியாது!💔

ஆய்வில் அதிர்ச்சித் தகவல்🚨

இலங்கையில் 5 முதல் 69 வயதுக்குட்பட்ட மக்களில் சுமார் 62 சதவீதமானோரால் சுயாதீனமாகக் கணினியைப் பயன்படுத்த முடியாது என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் புதிய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கான கணினி அறிவு புள்ளிவிபரச் செய்திமடலின்படி, இலங்கையில் 38.1 சதவீதமானோர் மட்டுமே கணினி அறிவு பெற்றவர்களாக உள்ளனர்.

எனினும், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட ஏனைய டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தும் திறனைக் கொண்டவர்களின் விகிதம் 72.5 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

மேலும், இலங்கையில் 20.8 சதவீதமான வீடுகளில் மட்டுமே கணினி அல்லது மடிக்கணினி வசதி காணப்படுகின்றது.

பிரதேச ரீதியாகப் பார்க்கும்போது, நகர்ப்புற வீடுகளில் 36.2 சதவீதத்திலும், கிராமப்புற வீடுகளில் 18.6 சதவீதத்திலும், தோட்டப்புற வீடுகளில் வெறும் 2.2 சதவீதத்திலும் மட்டுமே கணினிகள் உள்ளன.

மாகாண ரீதியிலான கணினி அறிவு விகிதத்தில் மேல் மாகாணம் 47.6 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. அதேவேளை, வடமத்திய மாகாணம் 27.5 சதவீதத்துடன் மிகக் குறைந்த கணினி அறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading