Technology

AI செயலிகளை கட்டுப்படுத்த புதிய பாதுகாப்பு வசதி..!!

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், எதிர்பாராத வகையில் செயல்படும் AI செயலிகளைக் கட்டுப்படுத்தும் புதிய பாதுகாப்பு வசதியை Crowd Strike நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

‘AI Kill Switch’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வசதி, நிறுவனங்களின் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை மீறிச் செயல்படும்போது அவற்றை நிறுத்த உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அனுமதியின்றிச் செயல்படும் AI கருவிகளின் இயக்கத்தை நிறுத்துவதுடன், அவை மீண்டும் இயங்குவதைத் தடுக்கவும், நிறுவனத்தின் இணைய வலையமைப்புக்கான அணுகலைத் துண்டிக்கவும் முடியும்.

ஆகவே, இதனால் நிறுவனங்களின் முக்கியத் தரவுகளையும் கணினி அமைப்புகளையும் பாதுகாப்பதில் கூடுதல் கட்டுப்பாட்டைப் பெற முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன்; AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு விரிவடைந்து வரும் நிலையில், அதன் செயல்பாடுகளைக் கண்காணித்து ஆபத்தான நடவடிக்கைகளைத் தடுக்க இத்தகைய புதிய வசதிகள் முக்கியத்துவம் பெறும் எனக் கருதப்படுகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading