Local

இலங்கையில 7 மணித்தியாலங்கள் மட்டுமே சூரிய வெளிச்சத்தை காணும் கிராமம்!

இலங்கையில் நாள் ஒன்றுக்கு 7 மணித்தியாலங்கள் மட்டுமே சூரிய வெளிச்சத்தை காணும் மக்கள் வாழும் கிராம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லுணுகம பிரதேச செயலகத்தின் மடொல்சீம கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள கொஹொனாவெல என்ற கிராமத்தில் யஹன்கல, கல்உல்ல, ஹய்ன்தம்மாகல மற்றும் வியன்கல ஆகிய மலைத்தொடர்களுக்கு நடுவில் இந்த கிராமம் அமைந்துள்ளது.

இந்த கிராமம் 1815 ஆம் ஆண்டு ஊவா வெல்லஸ்ஸ கிளர்ச்சியின் போது மறைந்துக் கொள்வதாக ஒரு சிலரால் உருவாக்கப்பட்டது.

தற்போது இந்த கிராமத்தில் சுமார் 55 குடும்பங்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் நாள் ஒன்றுக்கு 7 மணித்தியாலங்கள் மாத்திரமே சூரிய வெளிச்சத்தை காண முடிவதாக தெரியவந்துள்ளது. அத்துடன் இந்த கிராமத்தில் வாழும் மக்கள் மிகவும் நெருக்கடியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

அருகிலுள்ள கிராமங்களுக்கு செல்வதற்கு பாதைகள் கூட இல்லை என குறிப்பிடப்படுகின்றது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading