Local

இலங்கை இந்திய கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு!

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள ஒரு நாள் மற்றும் டி20 போட்டித் தொடர்களை சில தினங்களுக்கு ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த ஒரு நாள் போட்டித் தொடரை இம்மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது போட்டியை 21 ஆம் திகதிக்கும், இறுதி போட்டியை 24 ஆம் திகதிக்கும் ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டி20 போட்டிகள் இம்மாதம் 26, 28 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரேன்ட் பிளவர் மற்றும் தரவு பகுப்பாய்வாளர் ஜி.டி நிரோஷன் ஆகியோருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து இவ்வாறு போட்டித் தொடரை சில நாட்களுக்கு ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading