விஹாரை வாசலில் வீழ்ந்து உயிரிழந்தவருக்கு கொரோனா!

அம்பலங்கொடை − மோதர விஹாரை வளாகத்தில் வீழ்ந்து உயிரிழந்த நபருக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி ,விஹாரைக்கு வருகைத் தந்த நபரொருவர் கடந்த 7ம் திகதி, விஹாரை வாசலில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
அந்த சடலம் மீது பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட PCR பரிசோதனைகளில், குறித்த நபருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ,ஹிக்கடுவை பகுதியைச் சேர்ந்த 54 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
