Local

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குமார் சங்கக்காரா சுய தனிமைக்கு உட்படுத்தியுள்ளார்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார சங்கக்கார, தன்னை சுய தனிமைக்கு உட்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்தில் இருந்து கடந்தவாரம் நாடு திரும்பியதாலேயே அவர் இவ்வாறு சுய தனிமை நடைமுறையை பின்பற்றியுள்ளார்.

நாடு திரும்பியதும் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பதிவு செய்துக்கொண்ட அவர், பின்னர் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமையவே இவ்வாறு செயற்பட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களை, வீட்டில் பாதுகாப்பான முறையில் தனிமையில் இருக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading