Local

இலங்கை கிரிக்கெட் அணியில் மீண்டும் லசித் மலிங்க!

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணியின் வியூக பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர பந்து வீச்சாளர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபை இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை,  இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவுடன் இடம்பெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இந்த தொடரிற்கான பயிற்றுவிப்பாளர்களாவே இவர்கள் இருவரும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading