Local

இலங்கை தாதா அங்கொட லொக்காவின் வீட்டில் திடீர் சோதனை!

இலங்கை தாதா அங்கொட லொக்கா உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கோவையில் உள்ள அவரது வீட்டிலும் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இலங்கையை கலக்கிய நிழல் உலக தாதா அங்கோட லக்கா. இவர் கடந்த ஜூலை மாதம் கோவையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தற்போது மிகப்பெரிய அளவிலான பேசுப்பொருளாக வெடித்திருக்கிறது.

இவரது மரணத்தில் பல்வேறு விதமான மர்மங்கள் இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அது சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டது.  தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி-யின் டி.எஸ்.பி. ராஜு தலைமையிலான 7 பேர் கொண்ட குழு இந்த சம்பவத்தை விசாரணைக்கு எடுத்து கொண்டனர். அதன் அடிப்படையில் முதற்கட்டமாக அங்கொட லொக்காவின் மொபைல் எண்ணை கொண்டு அதில் அவரை யாரெல்லாம் தொடர்பு கொண்டார்கள் என்பது குறித்தான விசாரணை தொடங்கிய நிலையில், தற்போது கோவையில் உள்ள அவரது வீட்டில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அங்கோட லக்காவை பொறுத்தவரையில் வெளியில் பெரிதும் பேசிக்கொள்ளமாட்டார்.

அவருடைய தமிழ் சற்று வித்தியாசயமாக இருக்கும். அவர் துபாயில் பிறந்து வளர்ந்த நபர் என்றும், ஊரடங்கு நிறைவுற்ற பிறகு துபாய்க்கு செல்லவிருப்பதாகவும் தெரிவித்ததாக அவரது வீட்டின் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, கொள்ளை, கொலை, வழிப்பறி போன்ற பல்வேறு விதமான குற்றச்சம்பவங்களில் இலங்கையில் தேடக்கூடிய முக்கிய குற்றவாளியாக அங்கோட லக்கா உள்ளார். எனவே அவரது வீட்டில் பல்வேறு விதமான விடயங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்ற கருத்தின் அடிப்படையிலேயே தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அங்கோட லக்கா காதலி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது குடும்பத்தினரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading