Local

இலங்கை பேராதனை பல்கலைக்கழகத்துக்கு சர்வதேச உயர்மட்ட அங்கீகாரம்!

பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச தரப்படுத்தலொன்றில் மீண்டும் உயர்மட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Times Higher Education World Ranking – 2022 என்றழைக்கப்படும் தரப்படுத்தலின் பிரகாரம், உலகின் முதன்மையான 500 பல்கலைக்கழகங்களின் வரிசையில் மூன்றாம் இடத்தையும், இலங்கை பல்கலைக்கழகங்களில் முதலாம் இடத்தையும் பேராதனைப் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

இத் தரப்படுத்தலானது ஆய்வுப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களின் தர வரிசையை உருவாக்குகிறது.

பல்கலைக்கழகங்களின் ஆய்வை மையப்படுத்திய நோக்கங்கள், கற்றல் பின்புலம், தொழிற்துறை வருமானம், சர்வதேச ரீதியிலான தோற்றப்பாடு முதலான விடயங்களின் அடிப்படையில் தரப்படுத்தல் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

மாணவர்கள், கல்விமான்கள், பல்கலைக்கழக பிரதானிகள் ஆகியோருடன் அரசுகள் மற்றும் கைத்தொழில் அமைப்புக்களின் நம்பிக்கையை வென்ற முழுமையான மற்றும் நடுநிலையான ஒப்பீடுகளை மேற்கொள்ளக்கூடிய செயலாற்றுகை குறிக்காட்டிகளை அமைப்பு பயன்படுத்துகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading