இலங்கை முழுவதும் திடீர் மின்தடை..!!
🛑நாடு முழுவதும் திடீர் மின் தடை – அமைச்சர் விசேட அறிவிப்பு.. நுரைச்சோலையில் 3 மின் பிறப்பாக்கிகளும் செயலிழப்பு.!
நாட்டின் பல பகுதிகளில் இன்று (17) காலை முதல் திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ள நிலையில், மின் விநியோகத்தை மிக விரைவில் படிப்படியாக இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார்.
மேலும், மின் தடை காரணமாக, நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களும் முற்றாக செயலிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று (17) காலை திடீரென ஏற்பட்ட தேசிய மின் கட்டமைப்புத் தடையைத் தொடர்ந்து இந்த அவசர நிலை உருவாகியுள்ளது.
மின்சாரக் கட்டமைப்பை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் பணிகளைத் துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட தரப்பினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

You must be logged in to post a comment.