Local

இஷாரா செவ்வந்தியை தான் காதலிக்கவில்லை – நாமல் ராஜபக்ச

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியை தான் காதலிக்கவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று (17.10.2025) சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னால் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, “நீங்கள் செவ்வந்தியை காதலித்தீர்களா?” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் பொறுப்பு

மேலும் கருத்து தெரிவித்த அவர், “பாதாள உலகில் தொடர்புடையவர்களை காவல்துறை விசாரிக்க வேண்டும். அது காவல்துறையின் பொறுப்பு. எனினும், பாதாள உலகில் தொடர்புடையவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதையும் காவல்துறை கருத்தில் கொள்ள வேண்டும்.

ishara sewwandi name love

ஒரு குழு திருடர்களுக்காக 17 கடவுச்சீட்டுக்களை உருவாக்கி நாட்டை விட்டு வெளியேறியதாக காவல்துறைக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இந்த செயலாளர் யார்? இந்த தகவலை காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சருக்கு யார் கொடுத்தார்கள்.

இதை உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சருக்கு உள்ளது. வெளியேறிய மக்களில் பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்களும் இருந்திருக்க வேண்டும்.

எனவே, காவல்துறைக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் இதில் அவதானம் செலுத்த வேண்டும்.

இதேவேளை, 323 கொள்கலன்களை விட்டுச் சென்றது போல பாதாள உலகத்தைச் சேர்ந்த ஒரு குழுவும் நாட்டை விட்டு வெளியேறியதா என்ற கேள்வி இந்த நேரத்தில் எழுகிறது.” என தெரிவித்துள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading