இஸ்ரேலுக்கு எதிராக அணிதிரள பிரபல பொப் பாடகி மக்களுக்கு அழைப்பு!!
பிரபல பாப் பாடகி துவா லிபா (Dua Lipa), ரஃபா அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலுக்கு எதிராக வெளியிட்டுள்ள பதிவு சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “குழந்தைகளை உயிருடன் எரிப்பதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது” என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு இதுவரை பல நூறு மில்லியன் மக்களால் பார்க்கப்பட்டுள்ளது.
கொசோவோ போரினால் பாதிக்கப்பட்ட குடும்பப் பின்னணியைக் கொண்ட துவா லிபா, அகதிகளின் வலியை உணர்ந்து தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருபவர். குறைந்தபட்சம் 45 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட இந்தத் தாக்குதலை “இனப்படுகொலை” என அவர் சாடியுள்ளார்.

You must be logged in to post a comment.