ஈரானைத் தாக்கத் தயார் : இஸ்ரேலின் அறிவிப்பால் பரபரப்பு
“எந்த நேரத்திலும், அமெரிக்கர்களின் உதவியின்றி, தனித்தும் கூட, ஈரானை பலவந்தமாகத் தாக்க இஸ்ரேல் தயாராக உள்ளது” என இராணுவ செய்தித் தொடர்பாளர் எஃபி டெஃப்ரின் தெரிவித்துள்ளார்.
தெஹ்ரான் இஸ்ரேலுக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாகத் தொடர்ந்து இருந்து வருகிறது என்றும், அந்நாட்டை ‘அழித்துவிடும் ஈரானின் தொலைநோக்குப் பார்வை’ இன்னும் ‘முடிவுக்கு வரவில்லை’ என்றும் டெஃப்ரின் கூறியதாக இஸ்ரேலிய பொது ஒளிபரப்பு நிறுவனமான கான் மேற்கோள் காட்டியுள்ளது.
பெப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து, இஸ்ரேலும் ஈரானும் தொடர்ந்து அச்சுறுத்தல்களைப் பரிமாறி வருகின்றன.

தெஹ்ரான் இஸ்ரேலைத் தாக்கினால், ஈரானை ‘கற்காலத்திற்கும் இருளுக்கும்’ தள்ளுவோம் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் செப்டம்பரில் கூறியிருந்தார்.

You must be logged in to post a comment.