ஈரானை அழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்! ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரானை அமெரிக்கா அழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும், அதனை மீண்டும் கட்டியெழுப்ப 25 ஆண்டுகள் தேவைப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இராணுவ நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது விரைவில் தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானில் அமெரிக்கா விரும்பிய அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தை அமெரிக்காவின் அனுமதியின்றி முன்னெடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கட்டார் மத்தியஸ்தம் ஊடாக அமெரிக்காவுக்கு ஈரான் புதிய அணுசக்தி முன்மொழிவொன்றை அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனை அமெரிக்கா பரிசீலித்து வரும் நிலையில், தமது ஏழு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என ஈரான் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்காவுக்கு உதவும் எந்தவொரு நாடும் தங்களின் சட்டபூர்வமான இலக்காகக் கருதப்படும் என ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படை (IRGC) எச்சரித்துள்ளது.

இதேவேளை, ஹோர்முஸ் நீரிணையில்,கடற்படை கண்ணிவெடிகளில் சிக்கியதால் மேலும் இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் தீப்பற்றியுள்ளதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் அனுமதியற்ற கடல்வழிப் பாதைகளைப் பயன்படுத்திய கப்பல்களில் குறைந்தது ஐந்து தீ விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.