World

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் ஆபத்து – இஸ்ரேலுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

இஸ்ரேல் – ஈரான் போர் 12 நாட்கள் கடந்து நிறைவுக்கு வந்துள்ள நிலையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. ஆனால் ஈரான் இராணுவம் அதனை மறுத்தது.

ஆனால் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் ஈரான் மீது பலத்த தாக்குதலை நடத்த தான் இராணுவத்துக்கு உத்தரவிட்டதாக அறிவித்தார்.

எவ்வாறாயினும் இஸ்ரேலின் இந்த செயட்பாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது Truth சமூக வலைதளத்தில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

“இஸ்ரேல் அந்த குண்டுகளை வீசக்கூடாது. அப்படி நீங்கள் அதனை செய்தால் அது பெரும் அத்து மீறலாகும். இப்பொழுதே உங்கள் விமானிகளை உங்கள் நாட்டுக்கே அழைத்து வாருங்கள்” என பதிவிட்டுள்ளார்.

“இஸ்ரேல் மீது எனக்கு மகிழ்ச்சி இல்லை” என தனது ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading