உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! சிக்கப்போகும் முக்கிய பிரபலம்?
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான தாக்குதல்தாரியான சஹ்ரான் ஹாசிமுக்கு பின்னால் இருந்து அனைத்தையும் இயக்கிய நிழல் மாஸ்டர்மைண்ட் (Shadow Mastermind) நௌஃபர் மௌலவியே என கொழும்பு மேல் நீதிமன்றில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதன் பின்னணி குறித்த அடுத்தகட்ட கேள்விகள் நாடு முழுவதும் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.
சஹ்ரானை முன்நிறுத்தி தாக்குதலைத் திட்டமிட்ட நௌஃபர் மௌலவி, இந்த அதிர்ச்சிச் சம்பவத்தை யாரின் தூண்டுதலின் பேரில் செய்தார்? யாருடைய அரசியல் அல்லது சர்வதேச லாபங்களுக்காகச் செய்தார்? அவருக்குப் பின்னணியில் இருந்து நிதியுதவியும் வழிகாட்டலும் வழங்கிய அந்தப் பெருப்புள்ளிகள் யார்? என்ற கேள்விகள் தற்போது மக்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்துள்ளன.
தாக்குதலின் பிரதான முகமூடிகள் களையப்பட்டு நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 15 பேர் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட போதிலும், சதியின் பின்னணியில் மறைந்துள்ள உண்மையான சூத்திரதாரிகளையும், அவர்களை இயக்கிய கரங்களையும் வெளிக்கொண்டுவருவதற்கான உண்மையான ஆட்டம் இனிமேல் தான் ஆரம்பமாகவுள்ளதாக அரசியல் மற்றும் புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You must be logged in to post a comment.