Cinema

கின்னஸ் சாதனை படைத்த அட்லியின் ராக்கா!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் அட்லி, தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனுடன் இணைந்து பிரம்மாண்டமான திரைப்படம் ஒன்றை உருவாக்கி வருகிறார்.

‘ராக்கா’ என பெயரிடப்பட்டுள்ள குறித்த திரைப்படம், இந்திய சினிமாவின் வழக்கமான எல்லைகளைத் தாண்டி, ஹாலிவுட் தரத்திலான நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.

கின்னஸ் சாதனை படைத்த அட்லியின் ராக்கா! எதற்காக தெரியுமா? | Atlee Movie Raaka Guinness World Record

இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

பிரம்மாண்டமான காட்சியமைப்புகள், நவீன விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் மோஷன் கேப்சர் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் படத்தின் முக்கிய அம்சங்களாக இடம்பெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கின்னஸ் உலக சாதனை படைத்த ‘ராக்கா’

இந்நிலையில், படக்குழுவினர் மேற்கொண்டுள்ள ஒரு புதிய தொழில்நுட்ப முயற்சி ‘ராக்கா’ திரைப்படத்தை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளது.

ஒரே நேரத்தில் 37 நடிகர்களின் மோஷன் கேப்சர் (Motion Capture) செயல்பாடுகளை பதிவு செய்ததன் மூலம், ‘Most People Motion-Captured in Real-Time’ என்ற பிரிவில் இப்படம் புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.

கின்னஸ் சாதனை படைத்த அட்லியின் ராக்கா! எதற்காக தெரியுமா? | Atlee Movie Raaka Guinness World Record

மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் என்பது நடிகர்களின் உடல் அசைவுகள் மற்றும் நடிப்பை டிஜிட்டல் முறையில் பதிவு செய்து, அவற்றை பின்னர் கணினி உருவாக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகளில் பயன்படுத்த உதவும் நவீன திரைப்படத் தொழில்நுட்பமாகும்.

குறிப்பாக பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள், கற்பனை உலகங்கள் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறைந்த திரைப்படங்களில் இந்த தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது.

‘ராக்கா’ படக்குழுவினர் ஒரே நேரத்தில் 37 பேரின் அசைவுகளை மோஷன் கேப்சர் செய்திருப்பது, இந்திய சினிமாவில் தொழில்நுட்ப ரீதியாக மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க முயற்சியாக பார்க்கப்படுகிறன்றது.

கின்னஸ் சாதனை படைத்த அட்லியின் ராக்கா! எதற்காக தெரியுமா? | Atlee Movie Raaka Guinness World Record

அட்லி – அல்லு அர்ஜுனிடம் வழங்கப்பட்ட சான்றிதழ்

இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில், கின்னஸ் உலக சாதனைக்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ் இயக்குநர் அட்லி மற்றும் நடிகர் அல்லு அர்ஜுனிடம் வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் படம் வெளியாவதற்கு முன்பே ‘ராக்கா’ திரைப்படம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

மேலும், ஹாலிவுட் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்திய சினிமாவின் பிரம்மாண்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள்  வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading