Features

உலகின் நீண்ட ஆணுறுப்பு கொண்ட திமிங்கலங்கள்!

உலகில் மிக நீண்ட ஆணுறுப்பு கொண்ட உயிரினம் பாலூட்டியான திமிங்கலம். இதன் ஆணுறுப்பின் நீளம் சராசரியாக 8 அடி இருக்கும். இதன் இரு விதைகள் எடை 200 கிலோவரை இருக்கலாம். பெண் திமிங்கலத்துடன் உறவு கொண்டால் 20-25 லிட்டர் விந்துவை வெளிப்படுத்தும்.

திமிங்கலங்கள் சராசரியாக இரண்டாண்டுகளுக்கொருமுறை துணையுடன் உறவில் ஈடுபடும். ஈன்ற குட்டித் திமிங்கலங்களை தாய்த் திமிங்கலம் பாதுகாக்கும். அவை வளரும்வரை ஆணுடன் மீண்டும் உறவு கொள்ளாது. கிரே திமிங்கில வகையில் ஒரு பெண் திமிங்கலத்துடன் இரு ஆண் திமிங்கலங்கள் உறவு கொள்ளும். ஐஸ்லாந்து அருங்காட்சியகத்தில் 70 கிலோ எடை கொண்ட நீலத் திமிங்கலத்தின் ஆணுறுப்புப் படிமம் பாதுகாக்கப்படுகிறது.

யானைகளைப் போலவே திமிங்கலங்கள் உறவு கொள்ளாத நேரங்களில் ‘s’ வடிவில் ஆணுறுப்பை உடலினுள் சுழற்றி வைத்துக்கொள்ளும். திமிங்கலங்கள் மனிதர்களைப் போல ரத்தவோட்டம் மூலமாக ஆணுறுப்பை விறைப்படையச் செய்யாது. தசைகளின் உதவியுடன் இதனைச் செய்யும்.
20 லிட்டர் விந்துவை தாங்கும் பெரிய கருக்குழாய் கொண்டிருக்கும் பெண் திமிங்கலம். இதில் செலுத்தப்படும் ஆண் திமிங்கலத்தின் விந்து, மற்ற போட்டியாளர்களின் விந்துவை முழுவதுமாக நீக்கிவிடும்.

குட்டிகளுக்கு பாலூட்ட இரு முலைக்காம்புகள் உள்ளன. திமிங்கலங்க குட்டிகளால் மற்ற மிருகங்கள் போல தாய்ப்பலை உறிஞ்ச முடியாது. இதனால் ஊசி செலுத்துவதுபோல முலைக்காம்பில் இருந்து பால் குட்டிகளின் வாயில் புகட்டப்படும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading