Local

தொலைபேசி, தொலைக்காட்சி சேவை கட்டணம் அதிகரிப்பு!

கைத்தொலைபேசி, நிலையான தொலைபேசி மற்றும் புரோட்பேண்ட் (broadband) சேவைகளுக்கான கட்டணத்தை அதிகரிக்க இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தக் கட்டணத் திருத்தம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கைத்தொலைபேசி, நிலையான தொலைபேசி , புரோட்பேண்ட் மற்றும் பிற முற்கொடுப்பனவு, பிற்கொடுப்பனவு சேவைகளுக்கான கட்டணங்கள் 20% அதிகரிக்கப்படவுள்ளன.

இதேவேளை அனைத்து தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டணங்கள் 25% அதிகரிக்கப்படவுள்ளன.

மேலும், அனைத்து கட்டண தொலைக்காட்சி சேவைகளுக்கான VAT 12% லிருந்து 15% ஆக உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading