Local

உலகில் அதிகளவு கண்காணிக்கப்பட்ட கோட்டாபய பயணித்த விமானம!

மாலைதீவில் இருந்து இன்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஏற்றிச் சென்ற சவுதி அரேபிய விமான உலகில் அதிகமாக கண்காணிக்கப்பட்ட விமானம் எனவும் இது இலங்கையில் ஏற்பட்டுள்ள குழப்பமான அரசியல் விவகாரங்கள் தொடர்பில் உலகளவிலான ஆர்வத்தை கோடிட்டு காட்டியுள்ளது எனவும் புளும்பேர்க் என்ற சர்வதேச ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

Flightradar24.com என்ற இணையத்தள தரவுகளின்படி சவுதி அரேபியாவில் விமானம் மாலைதீவு தலைநகர் மாலேவில் இருந்து ஜி.எம்.டி நேரடிப்படி இன்று காலை 7.43 அளவில் புறப்பட்டுள்ளது.

புறப்பட்டத்தில் இருந்து 5 ஆயிரம் இணைய பயனர்களாக விமானம் கண்காணிக்கப்பட்டுள்ளது.

இது ஐரோப்பா வானில் பறக்கும் பிரான்ஸ் விமானப்படைக்கு சொந்தமான விமானத்தை கண்காணிக்கும் நபர்களை விட மூன்று மடங்கு அதிகம்.

கோட்டாபய ராஜபக்சவை ஏற்றிச் செல்லும் சவுதி விமானம் சிங்கப்பூருக்கு சென்று அங்கிருந்து சவுதி திரும்பிச் செல்ல உள்ளதாகவும் பெயரை வெளியிட விரும்பாத மாலைதீவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading