Local

மாலைதீவில் கோட்டா ஒரு இரவை கழிப்பதற்கு 18 இலட்சம் ரூபா செலவு!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் தங்கியிருந்த போது புகழ்பெற்ற Waldorf Astoria Ithaafushi ஹோட்டலில் தங்கியிருந்ததாக மாலைதீவு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஹோட்டல் சங்கிலி முகமது அலி ஜானா என்ற பிரபல தொழிலதிபருக்கு சொந்தமானது.

இவர் மாலைதீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித்துக்கு நெருக்கமானவராவார். ஜனாதிபதி ஹோட்டலில் தங்கியிருப்பதை இந்த ஹோட்டலின் ஊழியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி அங்கு தங்கியிருப்பது குறித்து ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த ஹோட்டல் ஒரு இரவைக் கழிப்பதற்கான செலவு 5,903-8,760 அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்படுகிறது.(இலங்கை ரூபா 18 இலட்சம்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தங்கிருந்த விடயம் தொடர்பில் மாலைதீவு அரசு இன்னும் அறிக்கை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading