LocalTechnology

உலக உச்சி மாநாட்டில் பங்கேற்ற ரோபோக்கள்!

ரோபோக்கள் உலக உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ள நிலையில், பல விவாதங்கள் எழுந்துள்ளன.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் பொது நலனுக்கான செயற்கை நுண்ணறிவு குறித்த உலக உச்சி மாநாடு தற்போது நடைபெறுகிறது.

சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த உச்சிமாநாட்டில், ரோபோக்கள் மற்றும்  தொழில்நுட்ப வல்லுனர்கள் இணைந்துகொண்டுள்ளனர்.

இந்த மாநாடு  உலகளாவிய மாநாடுகளில் ரோபாட்டிக்ஸ் மற்றும் AI இன் ஒருங்கிணைப்பில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் பத்திரிக்கையாளர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு ரோபோக்கள் பதிலளிக்கும்.  எட்டு சமூக ரோபோக்கள் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட சிறப்பு ரோபோக்கள் உட்பட ஐந்தாயிரம் பங்கேற்பாளர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்.

வரலாற்றி முதல் முறையாக அனைத்து ரோபோக்களும்  ஒரே கூரையின் கீழ் ஒன்றாக பங்கேற்கின்றன.

மேலும் இந்த மாநாடானது  இதுவரை காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஏஐ தொழிநுட்பமானது, சமூகத்தோடு இணைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் முதல் படியாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading