உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சி
13 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க நடவடிக்கை நிறைவுக்கு வந்தமை மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் டிரம்ப் வெளியிட்ட கூற்றுகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை சடுதியாக சரிவடைந்துள்ளது.
WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 0.8% ஆல் சரிவடைந்து, 81.95 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
ப்ரென்ட் (Brent) வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 0.6% ஆல் குறைவடைந்து, 87.82 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

You must be logged in to post a comment.