Local

உலக வங்கி இலங்கைக்கு எச்சரிக்கை!

இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறைகள், அபிவிருத்தி பங்காளிகளின் இலக்குகளை அடைந்துகொள்ளும் நடவடிக்கைகளை மேலும் கடினமாக்கியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை, நேபாளம் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஃபரிஸ் எச்.ஹடட் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் உடனடி பொருளாதார மீட்சியின் பாதையில் இவை தாக்கம் செலுத்துவதாகவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை கவலையளிப்பதாகவும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஃபரிஸ் எச்.ஹடட் குறிப்பிட்டுள்ளார்.  

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading