Local

போராட்டக்காரர்களுடன் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணி தலைவர் ரோஷன் மஹானாமா காலிமுகத்திடல் போராட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை பார்த்துக்கொண்டு வீட்டில் இருக்க விரும்பவில்லை. சக எதிர்ப்பாளர்களுடன் ஒற்றுமையாக நிற்கவும், ஊழல் மற்றும் அதிகார வெறி கொண்ட தலைவர்களுக்கு எதிரான போராட்டத்திற்கு துணை நிற்கவும் எனது ஆதரவை தெரிவிக்க நேற்று மதியம் காலி முகத்திடலுக்கு வந்தேன்.

ஒரு மாத காலம் போராட்டமானது அமைதியாக நடப்பதை மறந்துவிடாதீர்கள். வன்முறை முயற்சிகள் இருந்தபோதிலும் அமைதியே தொடர வேண்டும். வன்முறையில் ஈடுபட வேண்டாம். தொடர்ந்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading