Local

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் இருந்து யாரும் வெளியேரவோ உட்பிரவேசிக்கவோ முடியாது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து யாரும் வெளியேறவோ அல்லது உட்பிவேசிக்கவோ முடியாதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதன்படி இந்தப் பிரதேசத்தில் உள்ள தொழில் மற்றும் ஏனைய பணிகளில் ஈடுபடுவோருக்கும் இங்கிருந்து வெளியேறு வதற்கு முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

விசேடமாக சுகாதரப் பிரிவு அறிவித்துள்ளமைக்கு அமைவாக இவை தனிமைப்படுத்தப்பட்ட, ஆபத்தான பிரதேசங்களாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ,தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தின் ஊடாக செல்லும் வாகனங்கள் நிறுத்தப்படாமல் செலுத்தப்பட வேண்டும். இதற்கமைவாக , இந்த பிரதேசங்களில் பயணிகளை இறக்குதல் அல்லது அழைத்துச் செல்லல் முதலானவற்றை மேற்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading