Cinema

திரைப்படமாகும் ரஜினியின் வாழ்க்கை மாமனார் வேடத்தில் மருமகன்!

ரஜினியின் அரசியல் பற்றிய அறிவிப்பு பற்றி  இன்னும் சஸ்பென்ஸ் முழுமையாக வெளியாகாத நிலையில், அவர் நடித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கின்றன.

இந்த நிலையில் ரஜினியின் வாழ்க்கையையே திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் இயக்குநரான லிங்குசாமி.

ரஜினியின் தீவிர ரசிகன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் லிங்குசாமி, “ரஜினியின் வாழ்க்கையைப் படமாக்கினால் மக்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியவரும்.

ஒரு படத்துக்குத் தேவையான அனைத்து சுவாராஸ்யமான விஷயங்களும் ரஜினி வாழ்க்கையில் இருக்கின்றன. முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு அவரது வாழ்க்கைப் படம் முன்மாதிரியாக இருக்கும்.’’
– என்று கூறியுள்ள லிங்குசாமி, “அப்படி ரஜினி படம் உருவானால் அதில் தனுஷ் நடித்தால் பொருத்தமாக இருக்கும்’’ என்றும் தெரிவித்திருக்கிறார்.

மாமனாரின் வேடத்தில் மருமகன்! நல்ல பொருத்தம் தான்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading