Local

ஊரடங்கு மீண்டும் நீடிக்கப்பட்டமைக்கான காரணம் வெளியானது!

ஆறாம் திகதியுடன் முடிவுக்கு கொண்டுவரப்படவிருந்த ஊரடங்கு சட்டம் 13ம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு நீடிக்கப்பட்டமைக்கான காரணத்தை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா வெளியிட்டுள்ளார். இதன்படி, வைத்தியர்களின் பரிந்துரைகளுக்கு அமையவே, ஊரடங்கை நீடிக்க தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக தடுப்பூசி திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டியதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தலைமையிலான கோவிட் – 19 தடுப்புக்கான கூட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நாளைய தினம் இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார்.

அதன்படி, இம்மாதம் 13ம் திகதிக்குள் நாட்டில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி போடுவதே குறிக்கோள் என்று இராணுவ தளபதி தெரிவித்தார்.    

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading