Cinema

நடிகர் அஜித் ரஷ்யாவில் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பைக்கில் பயணம்!

அஜித் குமார், ஹுமா குரேஷி நடிக்கும் படம், வலிமை. போனி கபூர் தயாரிக்க, வினோத் இயக்குகிறார். இப்படத்தின் சண்டை காட்சிகளை படமாக்க படக்குழு ரஷ்யா சென்றது. அங்கு தனது காட்சிகளை நடித்து கொடுத்த அஜித், ரஷ்யாவில் 5 ஆயிரம் கி.மீ தூரம் பைக்கில் பயணம்செய்தார். கொரோனா தளர்வுக்கு பிறகு உலகளாவிய பைக் பயணம் செய்ய அஜித் பரிசீலித்து வந்தார்.

அதன் முதற்கட்டமாக, ரஷ்யாவில் அஜித் பயணத்தை தொடங்கியுள்ளார். அவரது போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதற்கு முன்பு வலிமை படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்று,அங்கிருந்து 10,800 கி.மீ தூரம் வடகிழக்கு மாநிலங்களில் பைக்கில் பயணம் மேற்கொண்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading