Cinema

எதற்காக மதம் மாறினேன் நடிகை வனிதா பரபரப்பு தகவல்!

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை வனிதா விஜயகுமார், தற்போது தான் மதம் மாறியது ஏன் என்பது குறித்து பதிவிட்டுள்ளார்.

சர்ச்சைகளுடன் வனிதா

நடிகை வனிதா அடுத்தடுத்து பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தனது வேலையில் மிகவும் சரியாக சென்று வருகின்றார். திருமணம், பிக்பாஸ் ஜோடி என அடுத்தடுத்து இவர் சந்திக்காத பிரச்சினையே இல்லை.

பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற வனிதா தாறுமாறாக விளையாடி அசத்தினார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இவர், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உடல்நிலை சரியில்லாததால் வெளியேறினார்.

நடிப்பில் பிஸியாக இருக்கும் வனிதா

தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும், சமீபத்தில் தாய்லாந்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தினை வெகுவாக கவர்ந்தது.

அனல் காற்று, காத்து, தில் இருந்தா போராடு, கென்னி, பிக் அப் டிராப், அந்தகன், சிவப்பு மனிதர்கள், 2கே காதல் அழகானது என அதிகமாக படங்களை கை வசம் வைத்துள்ளார்.

மதம் மாறியது ஏன்?

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை வனிதா, தற்போது தான் மதம் மாறியது ஏன் என்பது குறித்து பதிவிட்டுள்ளார்.

அதன்படி சந்தோஷமான, மகிழ்ச்சியான, அமைதியான வாழ்வை வாழ தான் சில வருடங்களுக்கு முன் புத்த மதத்தை பின்பற்ற தொடங்கியதாகவும், அதன்பின் அதைப்பற்றி மறுபரிசீலனை செய்ய எதுவும் இல்லை எனவும் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading