Lead News

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிட முடிவு

2020 ஏப்ரல் இறுதி வாரத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் அன்னம் சின்னத்தில்கீழ் போட்டியிடுவதற்கு ரணில் மற்றும் சஜித் அணிகள் இணக்கம் வெளியிட்டுள்ளன.

ரணில் மற்றும் சஜித் ஆதரவு அணிகளின் உயர்மட்ட உறுப்பினர்களுக்கிடையில் இன்று மாலை சிறிகொத்தவில் நடைபெற்ற சந்திப்பின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சஜித் பிரேமதாச தலைமையில் மலரவுள்ள புதிய அரசியல் கூட்டணியின் (ஐக்கிய மக்கள் சக்தி) சின்னமாக அன்னத்தை ஏற்குமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு கூட்டணியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று மாலை அறிவித்துள்ளார்.

மாற்று தேர்வாக யானை சின்னமும் பரிசீலனையில் இருக்கின்றது. சட்டரீதியிலான சிக்கல்கள் தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்கப்பட்ட பின்னர், சின்னம் குறித்த அறிவிப்பு எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading