Entertainment

கணவன் மனைவியாக காதலித்துப்பாருங்கள் கன்டிப்பாக புரியும்

♥️♥️காதலன் காதலியாக காதலிக்காமல் கணவன் மனைவியாகி காதலித்துப்பாருங்கள்♥️❤️
சினிமா பாடல்களை முணுமுணுக்கும் காதலியாக வேண்டாம்
அலகுர்ஆனை அழகிய தொணியில் ஓதும் மனைவியாக வேண்டும்
அழகினால் என்னை மயக்கும் காதலியாக வேண்டாம்
அறிவினால் என்னை அனுசரித்துப் போகும் மனைவியாக வேண்டும்
சிரித்து சிங்காரித்து என்னை வியக்கவைக்கும் காதலியாக வேண்டாம்
இறைவன் முன் அழுது என் ஈமானுக்கு உரமூட்டுகின்ற மனைவியாக வேண்டும்
சாப்டியா என்று கேட்கும் காதலியாக வேண்டாம்!
சாப்பிடுங்க என்று ஊட்டிவிடும் மனைவியாக வேன்டும்.
யாரோ பிறிண்ட் பண்ணிய போட்டோக்களை அனுப்பும் காதலியாக வேண்டாம்
உள்ளத்தால் எனக்காக இறைவனிடம் பிரார்த்திக்கும் மனைவியாக வேண்டும்
Take Care. என்று சொல்லும் காதலியாக வேண்டாம்!
பீ அமானில்லாஹ் என்று சொல்லும் மனைவியாக வேண்டும்
நடுநிசியில் தொலைபேசியில் பயந்த குரலில் தூங்கிட்டியா எனக்கேற்கும் காதலியாக வேண்டாம்
தஹுஜ்ஜுக்கு நேரமாகிட்டு இன்னும் எழும்பல்லயா என தடாவி எழுப்பாட்டும்
மனைவியாக வேண்டும்
என் தாய் தந்தையர்களுக்குத் தெரியாமல் பேசும் காதலியாக வேண்டாம்!
என் தாய் தந்தையுடன் பேசும் மனைவியாக வேண்டும்
கண்ணுல கனவையும். நெஞ்சில ஆசையும் சுமக்கும் காதலியாக வேண்டாம்!
கண்ணுல என் குடும்பத்தையும். நெஞ்சில என்னையும் சுமக்கும் மனைவியாக வேண்டும்
எவனுக்கோ மனைவியாகப் போகும் காதலியாக வேண்டாம்!
எனக்காக பிறந்து என்னை நம்பி கரம் பிடித்து வாழ வரும் மனைவியாக வேண்டும்.
காதலிக்கும் போது மட்டும் உணர்ச்சிகளைத் தூண்டி விடும் காதலியாக வேண்டாம்
திருமணம் முடித்த பின் சுவனத்திலும் உன்னோடு தான் இருப்பேன் நீ இல்லையேல் எனது சுவன வாழ்க்கையும் நரகமாகிவிடும் எனக்கூறும் மனைவியாக வேண்டும்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading